வேற்றுமையா? பாகுபாடா?
மாற்றுத்திறனாளிகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் கொண்டாடப்படும் சிறப்பு தினங்களை ஒட்டி தயாரிக்கப்பட்டுள்ள ஒரு துண்டு பிரசுரத்தில் ”வேற்றுமையை ஒழிப்போம்” என்று சொல்லாடல் கையாளப்பட்டிருந்தது. இது முற்றிலும் தவறான சொல்லாடல்.
வேற்றுமை என்பது இயற்கையில் ஒன்றுக்கொன்று வேறுபட்டிருப்பது. ஆண் - பெண், பள்ளம் - மேடு, நீர் - நெருப்பு, செடி - மரம் என்றவாறு பலவகையாக வேற்றுமைகள் உண்டு. இவையனைத்தும் இயற்கையானவை இயல்பானவை.
பாகுபாடு என்பது செயற்கையில் ஒன்றை உருவாக்கி, தான் வாழ பிறரைச் சுரண்டுவது. மேல் கீழான எண்ணத்துடன் பிறரை மதிப்பது, நடத்துவது, பின்பற்றுவது.
நீங்கள் வெள்ளை நான் கருப்பு என்பது வேற்றுமை,
வெள்ளை அழகு, கருப்பு அசிங்கம் என்பது பாகுபாடு.
நீங்கள் உயரம் நான் குட்டை என்பது வேற்றுமை,
உயரம் பெருமை, குட்டை சிறுமை என்பது பாகுபாடு.
நீங்கள் கிராமம் நான் நகரம் என்பது வேற்றுமை,
கிராமத்தான் நாகரிகம் குறைவானவனாகவும், நகரத்தான் மேட்டிமை மிக்கவனாகவும் கருதுவது பாகுபாடு.
இன்னும் ஆம்பள-பொட்டச்சி என்பதும், மேல்சாதி- கீழ்சாதி என்பதும், பலசாலி-நோஞ்சான் என்பதும் பாகுபாடு.
மாற்றுத்திறனாளிகளை நொண்டி, குருடு, செவிடு, ஊமை என்பதும், மாற்றுப்பாலினத்தவரை ஒம்பது, அலி, அது என்பதும் பாகுபாட்டுச் சொற்கள்.
இவ்வாறான பாகுபாட்டுச் சொற்களை எந்தவித சமூக அக்கறையும் இன்றி பயன்படுத்துவதும், அவ்வாறான பாகுபாட்டு மனநிலையில் உழல்வதும், பிறரைப் பாகுபடுத்திப் பேசுவதை, பழகுவதை தன்னுடைய அன்றாட நடத்தையில் வைத்துக் கொண்டு வாழ்வதும் முற்றிலும் தவறானது. அறநெறிக்கு மாறானது.
ஆகவே நாம் ஒழிக்க வேண்டியது பாகுபாட்டை மட்டுமே. வேற்றுமையை அல்ல. மாறாக வேற்றுமைகளைப் போற்ற வேண்டும். ஒழிக்கக் கூடாது.
"வேற்றுமையில் ஒற்றுமை காண்போம்" ("Unity in Diversity") எனும் சொற்றொடரை நினைவில் கொண்டுவர வேண்டிய அதே வேளையில், ”பாகுபாடு ஒரு பாவச் செயல்” (”Discrimination is a Sin") என்ற பதத்தையும் நம் மனதில் ஆழப் பதிவு செய்வோம்.
பாகுபாட்டை ஒழிப்போம்.
பாகுபாட்டை வேரறுப்போம்.
பாகுபாடற்ற சமூகம் படைப்போம்.
- மாணிக்க முனிராஜ்
Friday, 1 September 2023
வேற்றுமையா? பாகுபாடா?
Subscribe to:
Posts (Atom)
பண் பாடு
பயணங்கள் தான் மனிதனைப் பக்குவப்படுத்துகிறது. பக்குவங்கள் தான் மனிதனைப் பண்படுத்துகின்றன. பண்பாடு தான் மனிதனைப் பண் பாடவும் வைக்கிறது.
-
உலக மகளிர் தினத்தை வெறுமனே மகளிர் தினமாகக் கொண்டாடாமல் உலக உழைக்கும் மகளிர் தினமாக கொண்டாடுகிறோம். உழைக்காமல் குடும்பத்தையே சுரண்டி, குடித்த...
-
பயணங்கள் தான் மனிதனைப் பக்குவப்படுத்துகிறது. பக்குவங்கள் தான் மனிதனைப் பண்படுத்துகின்றன. பண்பாடு தான் மனிதனைப் பண் பாடவும் வைக்கிறது.
-
தங்களுக்கு வாய் இருப்பதாலும், அதிகாரம் இருப்பதாலும் நீங்கள் உத்தரவிட்டே ஆக வேண்டும்.. எனக்குக் காதுகள் இருப்பதாலும், தங்களின் சார்நிலைப் பண...