யுகம் யுகமாய்த் தேக்கி வைத்த வரலாற்றை
காலங்காலமாகக் கடத்தி வந்த வித்தை
ஆமீபா முதல் சமீபம் வரை முன்னோர்களின் அறிவும் அனுபவமும்
தொகைதொகையாய் சேகரமான
காலப் பெருவெளியின் பெருந்தாழி
எண்ணிலா எண்ணங்கள் உட்கார்ந்துத் தேய்த்து மொழுக்கடைந்து வழுக்கையான திண்ணை
நல்லாரும் பொல்லாரும்
உள்ளாரும் இல்லாரும்
வல்லாரும் எல்லாரும் -
கல்லாராய் நில்லாராய் நகர்த்திய நிகரிலாத் தேர்
பள்ளத்தை நோக்கி மட்டுமல்ல
மேட்டை நோக்கியும் பாய்ந்து ஏற்றத்தாழ்வுகளைச் சமன்படுத்தும் சமத்துவத் தண்ணீர்
No comments:
Post a Comment