பூவுலகின் புனித நாள்
'என் அனுபவத்தில் பல
மருத்துவமனைகளைப் பார்த்தவன் நான்'
என
வருந்தும் அளவிற்கான அனுபவம் எனக்கில்லை என்பது
மகிழ்ச்சிதான். ஆனால்
நான்
இதுவரை
கண்ட
மருத்துவமனைகள் அனைத்திலிருந்தும் வேறுபட்ட ஒரு
அனுபவத்தை என் உறவினரின் மருத்துவ
சிகிச்சைக்காக மதுரைக்குச் சென்றபோது
'அரவிந்த் கண்
மருத்துவமனை'யில்
உணர்ந்தேன்.
நோயாளி
விவரப்
பதிவிற்காக என்
மனைவி
வரிசையில் நிற்கும்போது வழமையான கடலை
போட்டுக் கொண்டு
அருகில் நின்றேன். மக்கள்
நெறியாளர் ஒருவர்
அருகில் வந்து,
"ண்ணே...
ஒரு
பதிவுக்கு ஒருத்தர் மட்டும் நின்னா
போதும்ணே... ... இல்லண்டா அவிய்ங்களுக்குப் பதிலா
நீங்க
வேணும்னாலும் நிக்கலாம்ணே..." என்றார். "இல்ல சார், ரெஜிஸ்ட்டர் ஷீட்ல
ஆதார்
நம்பர்
கேட்டிருக்கீங்க... ஆதார் கார்டு எடுத்திட்டு வரல...
அதான்
என்ன
பண்றதுன்னு கேட்டிட்டுருந்தேன்" என்றேன். "ஆதார் இல்லாட்டாலும் பரவால்லண்ணே... கால்
வலிக்க
ஏன்
நிக்கீங்க... அங்கிட்டு போய்
உக்காருங்கண்ணே..." என்றார். இவைபோன்ற நேர்வுகளை எவ்வாறு கையாளவேண்டும் என்று நெறியாளர்
மிகத்தெளிவாக பயிற்றுவிக்கப்பட்டுள்ளார் என்பது நன்றாகப் புரிந்தது. மருத்துவ மனையின் ஒவ்வொரு பிரிவிலும் வாயிற்
காவலர்கள் முதல்
செவிலியர்கள், மருத்துவர்கள் வரை
ஒவ்வொரு பணியாளரும் நோயாளிகளையும் உடனுள்ளவர்களையும் கணிவோடும் மரியாதையோடும் நடத்தும் விதத்தையும் மக்கள்
கூட்டத்தைக் கையாளும் விதத்தையும் பாராட்ட வார்த்தைகளில்லை. வேறெங்கும் பார்த்திராத ஒரு அனுபவமாகவே
எனக்கு இருந்தது.
அடிப்படையில் என்
மனைவியும் ஒரு
செவிலியர் என்பதால், அந்த
ஒத்த
துறை
உறவைப்
பயன்படுத்தி ஒவ்வொரு பிரிவிலும் முந்திச் செல்ல
வாய்ப்புள்ளதா என்பதற்காக என்
மனைவியை "நானும் ஸ்டாஃப்தான்"ன்னு
சொல்லச்சொல்லி தொடக்கத்தில் முயன்று பார்த்தேன். ஆனால் அதற்கான
வாய்ப்பை எங்கும் பயன்படுத்தமுடியவில்லை என்பது மகிழ்வாகவே இருந்தது.
ஒருகட்டத்தில் அவ்வாறு கூறியதை “நானும் ரவுடிதான்” என்று சொல்லியதைப்போல நினைத்து
நகையாடினோம். மேலும் எவரொருவருக்கும் தனித்த சிறப்பு சலுகை காட்டியதாக எந்தவொரு இடத்திலும்
உணரவில்லை. நோயாளிகளுக்கிடையே எவ்விதமான பாரபட்சமுமின்றி
வரிசைக்கிரமமாக அனைவருக்கும் முக்கியத்துவமளித்து வழிநடத்திய சமத்துவ நடைமுறைக்கு ஒவ்வொருவரும் தலைவணங்க வேண்டும்.
நடக்கவிருப்பது ஒரு பெரியஅறுவை
சிகிச்சை (Major Surgery) என்பதை எங்கள் ஊர் கண்மருத்துவர் மூலமாக ஏற்கனவே தெரிந்துகொண்டதால்
மருந்து மாத்திரை செலவு எக்கச்சக்கமாக இருக்கும் என எதிர்பார்த்திருந்தோம்.
ஒட்டுமொத்தமாக ஆன மருந்து மாத்திரை செலவு ரூ.237 மட்டுமே என்பது வியப்பான உண்மை.
அத்தியாவசியமான மருந்துகள் மட்டுமே பரிந்துரைக்கப்பட வேண்டும் என்பதை மிகக் கவனமாகக் கையாள்கின்றனர். வழக்கத்தில் அறுவை சிகிச்சை என்றாலே சிலபல நரம்புவழி
நீர்ம (IV Liquids) போத்தல்களோடு இரண்டு மூன்று கைப்பைகள் நிறைய மாத்திரை
மருந்துகளை வாங்கிப் பழகிய நமக்கு இது புதுமையாகத்தான் இருந்தது.
மருத்துவமனைக்குள் புழங்கும் ஒவ்வொரு
பகுதியையும் யாரும் எவரிடமும் விளக்கம் கேட்டுச் செல்லத் தேவையில்லாத அளவிற்கு
தெளிவாக வழிகாட்டும் விவரங்கள் இருந்தன. எங்கெங்கெல்லாம் நோயாளிகள்
காத்திருக்கவேண்டிய தேவையிருக்கிறதோ அங்கெல்லாம் மருத்துவமனையின் உச்சபச்ச இலக்கான
‘தேவையில்லாத கண்பார்வையிழப்பை முற்றிலுமாகத் தவிர்த்தல்’ எனும் வாசகப் படமும்,
அவ்வப்போது நோயாளிகளுக்கு ஏற்படும் ஐயங்களை எளிமையாகக் களையும்படியாக
விளக்கப்படங்களும், அரவிந்தில் சிகிச்சை எடுப்பவரின் உரிமைகள், கடமைகளை விளக்கி
அவற்றுக்கு ஊறு ஏற்பட்டால் புகார் தெரிவிக்கவேண்டிய எண்கள் நபர்கள் குறித்த விவர
விளக்கங்களும் உள்ளன.
எந்தவொரு இடத்தின் ஒட்டுமொத்த
சுகாதாரத்தையும் அளக்கும் மிகச்சிறந்த அளவுகோல் ‘கழிப்பறை’. மருத்துவமனை
வளாகத்தின் ஒவ்வொரு பிரிவும் மிக நேர்த்தியாக பராமரிக்கப்பட்டாலும் சுத்தத்திற்கான
இலக்கணமாகத் திகழும் கழிப்பறை அனைத்திலும் சிறப்பாக உள்ளன. தொடத்தேவையில்லா சிறுநீர்
கழிப்பறைகளை (Touchfree Urinals) இங்குதான் நான் முதன்முதலாகப் பார்க்கிறேன். மேற்கத்திய
கழப்பறைகளைப் புதிதாக பயன்படுத்துவோருக்குக் கூட அவற்றைப் பயன்படுத்தும் விதத்தை
உரிய விளக்கப்படங்களுடன் எளிமையாக விவரிக்கபட்டுள்ளன. மேலும் சிகிச்சையடுத்து
தங்கவைக்கப்படும் படுக்கையறைகள் பொதுவாகவும், தனிப்பட்ட அறைகள் வேண்டுவோருக்கு தனி
அறைகளும் உள்ளன. எல்லா கழிப்பறைகளிலும் காலைவேளையில் குளிப்பதற்கு வெந்நீர்
கிடைக்கின்றன. மருத்துவமனை வளாகமெங்கும் ஆங்காங்கே வெந்நீராகவோ தண்ணீராகவோ சுத்திகரிக்கப்பட்ட
குடிநீர் கிடைக்கிறது.
அரவிந்த் உள்நோயாளிகள் பிரிவின்
அடித்தளத்தில் இயங்கிவரும் வசந்தம் உணவகத்தின் உணவின் தரமும், எளிமையான விலையும்,
பராமரிப்பும், பணியாளர்களின் அன்பும் மருத்துவமனை உள்ளே இருக்கும் நபர்களைத்தாண்டி
அவ்வழியே செல்லும் மதுரைவாசிகளையும் உள்ளே வந்து சாப்பிட்டுப்போகும்படி
செய்துள்ளன. தேநீருக்கு நிலக்குறியீடாகச் சொல்லப்படும் வாணியம்பாடி தேநீரை விஞ்சி
நிற்கிறது வசந்தம் தேநீர். (ஆனாலும் உள்ளே செயல்படும் குழம்பி தேநீர் எந்திரக்
குவளை மையங்கள் (Machine Coffee Centre) இவற்றுக்கு திருஷ்டிப்பொட்டை வைக்கின்றன.)
காத்திருக்கும் எந்தவொரு இடத்திலும்
நோயாளியும் உடன்வரும் நபரும் அமர்ந்து காத்திருக்கும்படியாக போதுமான இருக்கைகள்
இருப்பதும், பணியாளர்களும் தேவையற்று நிற்க வேண்டாதபடிக்கான ஏற்பாடுகளும்,
மரியாதையோடு நோயாளியின் பெயர்களை விளித்து உரிய சேவையைச் செய்வதும் போன்ற
ஒவ்வொன்றும் மனதில் நின்று நிலைக்கின்றன.
“குப்புசாமி வாங்க… ஆயிஷா வாங்க…”
என்று நோயாளிகளை கண்ணியமாக அழைப்பதை “குப்புசாமி… ஆயிஷா…” என்று ஏவல் செய்யும் இதர
மருத்துவனைகளோடு ஒப்பிடாமல் இருக்க முடியவில்லை.
மரியாதையுடன் நடத்தப்படுதல், சிகிச்சை
தொடர்பான முடிவுகளில் நோயாளிகள் பங்குபெறுதல், நோய் பற்றிய விளக்கங்களைக்
கேட்டறிதல், சிகிச்சை பற்றி தகுந்த தகவல்களைப் பெற்று முடிவெடுத்தல், வேறொரு
மருத்துவரிடம் ஆலோசனை பெறுதல், சிகிச்சை குறித்த
தகவல்களைப் பாதுகாத்தல், சிகிச்சையை மறுத்தல், பாதுகாப்பான சுகாதாரமான
சூழல், சேவை குறைபாடுகளைப் பற்றிய புகார் அளித்தல் ஆகியன ஒவ்வொரு நோயாளியின்
உரிமைகளாக வரையறுக்கப்பட்டுள்ளன. அவற்றை பொதுமக்களுக்குத் தெரியும்படி விளக்கிக்க
காட்டுவதுடன், அவ்வுரிமைகளுக்கு மதிப்பளித்து அவ்வாறே
செயல்படவும் செய்கிறது மருத்துவமனை நிர்வாகம்.
“நாங்கள் இருக்கிறோம், நாங்கள்
இருக்கிறோம்” என்று கூவி அழைத்து நம்மிடம் முடிகிற அளவிற்கு உருவி ‘நம்மை இல்லாமல்
செய்யும்’ பன்னாட்டு பகாசுர மருத்துவ வணிக நிறுவனங்களுக்கு மத்தியில் ‘தரமான
பொருளுக்கு விளம்பரம் தேவையில்லை’ எனும் சொலவடைக்கேற்ப பெரிய விளம்பரம் இல்லாமல்
அமைதியாகவும் உண்மையாகவும் சேவை செய்து வருகிறது ‘மதுரை அரவிந்த் கண்
மருத்துவமனை’. இந்த மருத்துவமனையின் தூய்மையும், சேவையும், நோயாளிசார் அக்கறையும்
அரவணைப்பும் பணம் உள்ளவன்; இல்லாதவன் என்ற பாகுபாடில்லாமல் உலகின் நோய்வாய்ப்பட்ட
ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைக்கப்பெறும் நாள்தான் இப்பூலகின் புனிதநாள்.
-மாணிக்க
முனிராஜ்
manickamuniraj@gmail.com
No comments:
Post a Comment