Sunday, 22 November 2020

க்கவித க்கவித

அன்பின் தடிமன்
அம்மா சுட்ட தோசை

அனைத்து இடங்களையும் பிடித்துக்கொண்டது
'தாமரை'
ஊர்ச்சுடுகாட்டுச் சுவரில்

எளியவர்களைக்
கட்டுப்படுத்தும் காயப்படுத்தும் அடிமைப்படுத்தும் எல்லா விதிகளும் அருகில்...
ஆனால்
அதிகாரப்படுத்தும் ஆனந்தப்படுத்தும்
உரிமைப்படுத்தும் எல்லா விதிகளும் தூரத்தில்...

பாதைக்குத் தேவை உருவாவதில்லை
தேவைக்குத் தான் பாதை உருவாகிறது.

ஆமாம் சிறந்தவர்தான்!! யாருக்கு?
தேசிய வளர்ச்சியின் அடையாளமாக எங்கள் ஊரிலும் 3 கருவுரு மையங்கள்!


வழவழப்பாக அரைக்கும் இந்து பக்தி மாவுகளுக்குள் கார்ப்பரேட் விசுவாச நெடி நாசியை நாறடிக்கிறது.

ஒருபுறம் காந்தி-கோட்சே-இந்து-தீவிரவாதம் என திருப்பிட்டு
மறுபுறம் நோகாமல் நோண்டுகின்றனர் ஹைட்ரோகார்பனை
இதுதான் பக்தாள் பயங்கரவாதம்

சாதியில்லை மதமில்லை
சான்றுகளில் மட்டும்!

மதாபிமானிகளுக்கு எல்லாவற்றிலும் மதம் தழைக்க வேண்டும்; மனிதாபிமானி களுக்கு எல்லாவற்றிலும் மனிதம் பிழைக்க வேண்டும்!

தாயெனப்படுவது தமிழ் - நம் நாட்டின்
நோயெனப்படுவது ஊழல்

பாசிசம் உடை
பாயாசம் வடை
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்
"அரசியல் பேசக்கூடாது" என்பதே மறைமுகமான ஒரு நுண் அரசியல் தான்.
தேவை ஆசை
தேடல் வாசிப்பு
பயணம் படிப்பினை
உறவு ஊடாடல்
படைப்பெனும் கோலத்தின் புள்ளிகள்

Comment
Share

No comments:

Post a Comment

பண் பாடு

பயணங்கள் தான் மனிதனைப் பக்குவப்படுத்துகிறது.  பக்குவங்கள் தான் மனிதனைப் பண்படுத்துகின்றன.  பண்பாடு தான் மனிதனைப்  பண் பாடவும் வைக்கிறது.