ic

காமராஜரின் சாதனை விளக்கச்செய்தி ஒன்று புலனங்களில் உலா வருகிறது.
அதில் அடுக்கடுக்காகக் காமராஜரின் புகழைப் பாடி இறுதியில்,
"இந்தியாவிலெயே தொழில் வளர்ச்சியில்
இரண்டாவதாகக் கொண்டு வந்த காமராஜர் செய்தது சாதனையா..?
இல்லை
"இலவச"த்தின் பேரில் நம்மைப்
பிச்சைக்காரர்களாக
மாற்றி இருக்கும் இன்றைய தலைவர்களின்
செய்கை சாதனையா..?
பிடிச்சிருந்தா
லைக் பண்ணுங்க.
நல்ல விஷயத்த நாலு
பேருக்கு ஷேர் பண்ணுங்க."
என்றவாறு முடிகிறது.
இவ்வாறான செய்திகள் ஒரு வகை வியாதிபோல் பரவி வருகின்றன.
இச்செய்தியை மேம்போக்காகப் படித்துக் கடந்து போகும் பலருக்கும் இறுதி வரிகளை அவர்களின் மூளைக்குள் திணிக்க முயல்வதே இவ்வகைச் செய்திகளின் அடிப்படை நோக்கமாக உள்ளது.
காமராஜரின் சாதனையை/ எளிமையை / பொதுநலத்தைப் பாராட்டுவது மற்றும் நினைவு கூர்வது காலத்தின் தேவை. அதனை மறுப்பதற்கில்லை.
ஆனால் சந்தடி சாக்கில் திராவிட ஆட்சியைக் குறை கூறும் நோக்குதான் இவ்வகைச் செய்திகளின் மைய நோக்கமாக உள்ளது.
எந்தக் கணக்கெடுப்பும் இல்லாமல் உத்தேசமாகச் சொன்னால் கூட
திராவிட ஆட்சியால் கல்வி / வேலைவாய்ப்பில் பயன்பெற்றவர்கள் இதைப் படிக்கும் நம்மிலேயே பாதிக்கும் மேல் இருப்பர்.
இடஒதுக்கீடு என்ற ஆகப்பெரும் சமூகநீதி திராவிட ஆட்சியின் மாபெரும் விளைச்சல்.
விளைச்சலை மட்டும் அறுவடை செய்துக்கொண்டு உழவனைப் பகடி செய்வது மாபெரும் பிழை என்பது உணர/ உணர்த்தப்பட வேண்டும்.
No comments:
Post a Comment